இடுகைகள்

97 நபர்களுக்கு புதிய குடும்ப அட்டைகள் : சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி.கீதாஜீவன் வழங்கினார்.

படம்
  தூத்துக்குடி டூவிபுரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் மூலம் 97 நபர்களுக்கு புதிய குடும்ப அட்டைகளை மாண்புமிகு சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி.கீதாஜீவன் அவர்கள் வழங்கினார்.  ---------------- தூத்துக்குடி டூவிபுரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் மூலம் 97 நபர்களுக்கு புதிய குடும்ப அட்டைகளை வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (06.08.2021) நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாண்புமிகு சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி.கீதாஜீவன் அவர்கள் கலந்துகொண்டு ரேசன் கார்டுகளை வழங்கினார்.  பின்னர் மாண்புமிகு சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி.கீதாஜீவன் அவர்கள் தெரிவித்ததாவது:           தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட வழங்கல் அலுவலகத்தில் கடந்த ஜனவரி முதல்  ஜூன் வரை குடும்ப அட்டைகள் விண்ணப்பித்ததில் 22.7.2021 அன்று 4566 நபர்களுக்கு புதிய குடும்ப ...

தூத்துக்குடி மாவட்டத்தில் உதவி தேவைபடும் மூத்த குடிமக்கள், தங்களது பிரச்சனைகளுக்கு தீர்வு காண . . இலவச தொலைபேசி எண்-14567 மாவட்ட ஆட்சியர் தகவல் .:

படம்
  தூத்துக்குடி மாவட்டத்தில் உதவி தேவைபடும் மூத்த குடிமக்கள்; கட்டணமில்லா இலவச தொலைபேசி எண்-14567 மூலம்; மாவட்ட சமூகநல அலுவலர் அவர்களை தொடர்பு கொண்டு தங்களது பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம் - மாவட்டஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தகவல் -----------------------------       மூத்த குடிமக்களை காக்கும் பொருட்டு தேசிய மூத்த குடிமக்கள்  உதவி எண்: 14567 புதிதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மூத்த குடிமக்கள் தங்கள் வாழ்க்கையில் எழும் பிரச்சனையில் இருந்து விடுபட, தங்கள் குறைகளை நிவர்த்தி செய்து கொள்ள, கட்டணமில்லா இலவச தொலைபேசி எண்-14567-சமூகநீதி மற்றும் உரிமைத் துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உதவி N;தவைபடும் மூத்த குடிமக்கள்; கட்டணமில்லா இலவச தொலைபேசி எண்-14567 மூலம்; மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், தூத்துக்குடி, அவர்களை தொடர்பு கொண்டு தங்களது பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ் இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.  .

ஆகாய தாமரை நார் சார்ந்த பொருட்கள் தயாரித்தல் பயிற்சி : மாவட்ட ஆட்சித்தலைவர் துவக்கி வைத்தார்.

படம்
  தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் மேலஆத்தூரில் ஆகாய தாமரை நார் சார்ந்த பொருட்கள் தயாரித்தல் பயிற்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப.,  அவர்கள் துவக்கி வைத்தார். --------------------------- தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் மேலஆத்தூரில் ஆகாய தாமரை நார் சார்ந்த பொருட்கள் தயாரித்தல் பயிற்சி துவக்க நிகழ்ச்சி இன்று (05.08.2021) நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப.,  அவர்கள் கலந்துகொண்டு, ஆகாய தாமரை நார் சார்ந்த பொருட்கள் தயாரித்தல் பயிற்சியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப.,  அவர்கள் பேசியதாவது: மாண்புமிகு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள் கூறியதன் அடிப்படையில் ஆகாய தாமரை நார் சார்ந்த பொருட்கள் பயிற்சியினை தூத்துக்குடி மாவட்டம் மேல ஆத்தூர் பகுதி சுய உதவிக்குழுவில் உள்ள மகளிர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் நாபர்டு வங்கியானது ஆகாய தாமரை நார் சார்ந்த பொருட்கள் தயாரித்தல் பயிற்சியை நடத்துவதற்கு சிப்போ ...

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தினை. அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள் துவக்கி வைத்தார்

படம்
      தூத்துக்குடி. மாவட்டம் ஓட்டப்பிடாரத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சிறப்பு திட்டமான மக்களை தேடி மருத்துவம் திட்டத்தினை மாண்புமிகு சமூக நலன் - மகளிர் உரிமை துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள் துவக்கி வைத்தார். ---------------------- தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சிறப்பு திட்டமான மக்களை தேடி மருத்துவம் திட்டம் துவக்க நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப.,  அவர்கள் தலைமையில் இன்று (05.08.2021) நடைபெற்றது. நிகழ்ச்சியில், மாண்புமிகு சமூக நலன் - மகளிர் உரிமை துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள் கலந்து கொண்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சிறப்பு திட்டமான மக்களை தேடி மருத்துவம் திட்டத்தினை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு.மார்க்கண்டேயன் அவர்கள் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் பெண் சுகாதார தன்னார்வலர்களுக்கு மருந்து பெட்டகம் வழங்கப்பட்டது, சுகாதாரத்துறையின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட கண்காட்சியினை மாண்புமிக...

நாசரேத் கராத்தே மாணவர்கள் மாநில அளவிலான கராத்தே போட்டிக்கு தேர்வு

படம்
        நாசரேத் கராத்தே மாணவர்கள் மாநில அளவிலான  கராத்தே போட்டிக்கு தேர்வு தூத்துக்குடியில் சாரா கலை பள்ளியில் வைத்து கடந்த  23- 07-2021 வெள்ளி கிழமை அன்று    தூத்துக்குடி மாவட்ட அச்சிவர்ஸ் ஸ்போர்ட்ஸ் கராத்தே சங்கம் சார்பில் தூத்துக்குடி மாவட்ட கராத்தே போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில்  நாசரேத் ஆலன் திலக் கராத்தே பள்ளி மாணவர்கள், மாநில கராத்தே போட்டிக்கு தகுதி பெற்றனர் .  போட்டியில் வெற்றி பெற்று  மாநில போட்டிக்கு  தகுதி பெற்ற முன்னாள் அமைச்சரும்,  அதிமுக தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளருமான சண்முகநாதன் பரிசு வழங்கி வாழ்தினார். இதில் அதிமுக தூத்துக்குடி தெற்கு மாவட்ட அவைத் தலைவர் திருப்பார்கடல், ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய செயலாளர் காசி; மற்றும் பலர் கலந்து கொண்டு ஆலன் திலக் கராத்தே பள்ளி மாணவர்கனையும் பயிற்சி அளித்த கராத்தே மாஸ்டர் டென்னிசன்னை பாராட்டினார்கள்.

இராஜகோபாலன் கோசாலையின் சார்பாக படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு இலவச நோட்டுகள்.

படம்
                                                                                                                                                     02-08-2021. திங்கள் கிழமை  அன்று    மாலை தூத்துக்குடி முத்தையாபுரம் அருகிலுள்ள ராஜீவ் நகர் பகுதிகளில், வாழும் உப்பள தொழிலாளர்கள் அவர்களின் குழந்தைகளுக்கு , தூத்துக்குடி அகிலாண்டபுரம் பாஞ்சாலங்குறிச்சி செங்கமலம் இராஜகோபாலன்கோசாலையின் சார்பாக இலவச நோட்டுகள் வழங்கப்பட்டன. இதில் ஐம்பதிற்கும் மேற்ப்பட்ட பள்ளி குழந்தைகள் பயனடைந்தனர். மேலும் இந்நிகழ்சியில் சிறப்பு அழைப்பாளராக உயர்திரு விஜயன் அவர்கள் செந்தில் ஆண்டவர் அறக்கட்டளையின் சார்பில் கலந்து கொண்டு பள்ளி மாணவர...

புதுக்கோட்டை குளத்தினை தூர்வாரி ஆழப்படுத்தும் பணி துவக்கி வைப்பு : மேலும், திருச்செந்தூர் வட்டம் உடன்குடி, அடைக்கலாபுரம் பகுதியில் கருப்பட்டி, பனங்கற்கண்டு தயாரிக்கும் இடத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு .

படம்
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை குளத்தினை தூர்வாரி ஆழப்படுத்தும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார். மேலும், திருச்செந்தூர் வட்டம் உடன்குடி, அடைக்கலாபுரம் பகுதியில் கருப்பட்டி, பனங்கற்கண்டு தயாரிக்கும் இடத்தினையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ------------------------- தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை குளத்தினை வீனஸ் ஹோம் அப்ளையன்சஸ் மற்றும் தொழில் நிறுவனத்தின் மூலம் குளத்தினை தூர்வாரி ஆழப்படுத்தும் பணிகள் துவக்க நிகழ்ச்சி இன்று (03.08.2021) நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் கலந்துகொண்டு குளத்தினை தூர்வாரி ஆழப்படுத்தும் பணிகளை துவக்கி வைத்து பார்வையிட்டார்.                                                                                             ...