இடுகைகள்

நாசரேத் நகர அ.இ.அதிமுக இளைஞரணி சார்பாக மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாள் விழா

படம்
  புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 74 வது பிறந்தநாளை முன்னிட்டு நாசரேத் நகர அ.இ.அதிமுக இளைஞரணி சார்பாக தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் எஸ். பி. சண்முகநாதன்  அவர்கள் வழிகாட்டுதலின்படி நாசரேத் ரயில்வே நிலையம் எதிரில் நாசரேத் நகர இளைஞரணி செயலாளர் கராத்தே டென்னிசன் தலைமையில்   நாசரேத் நகர அ.இ.அதிமுக இளைஞரணி சார்பாக  மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாள் விழா  கொண்டாடப்பட்டது   இதில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைத்தலைவர் ஞானையா அவர்கள் கழகப் பிரமுகர் பெரியதுரை, 12வது வார்டு கவுன்சிலர் ரவீந்திரன், நாசரேத் நகர துணை செயலாளர் முருகேசன், நகர இளைஞரணி துணைச்செயலாளர் பிரபு, நாசரேத் நகர இளம் பெண்கள் பாசறை செயலாளர் ஜெயக்குமார், வார்டு செயலாளர் கணேசன், சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தேசிய அளவிலான வூசூ போட்டிக்கு. தூத்துக்குடி திருஇருதய மெட்ரிக் பள்ளி மாணவர்கள் தேர்வு

படம்
 தேசிய அளவிலான வூசூ  போட்டிக்கு தூத்துக்குடி  திருஇருதய மெட்ரிக் பள்ளி மாணவர்கள் தேர்வு. கடந்த மாதம் 27 , 28 தேதிகளில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற மாநில அளவிலான வூசூ  போட்டியில்  திருஇருதய மெட்ரிக் பள்ளி மாணவர்கள் மூன்று பேர் கலந்து கொண்டனர்.  நாற்பத்தி ஐந்து கிலோ எடை பிரிவில் மாணவர்கள் அருண்குமார் தங்கப்பதக்கமும் , 52 கிலோ எடைப்பிரிவில் மாணவர் முத்துவேல் தங்கப்பதக்கமும், இருபத்தி எட்டு கிலோ எடைப்பிரிவில் மாணவர் அசோக்குமார் வெள்ளிப் பதக்கமும் வென்றனர். தங்கம் மற்றும் வெள்ளி வென்ற மாணவர்கள் தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.   வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.  இவ்விழாவில் பள்ளியின் முதல்வர் அருட்சகோதரி அண்டனி சாரால் ரோஸ் அவர்களும் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் கருப்பசாமி மற்றும் பயிற்சியாளர்கள் சாலமோன், சுடலை கண் ஆகியோர் கலந்து கொண்டனர் . பள்ளியின் தாளாளர் அவர்களும் மற்ற ஆசிரியப் பெரு மக்களும் வெற்றி பெற்ற மாணவர்களையும் பயிற்சியாளர் களையும் பாராட்டி கௌரவித்தனர்.  விழா ஏற்பாடுகளை பள்ளியி...

வெற்றி பெற்ற நாசரேத் பேரூராட்சி 12வது வார்டு உறுப்பினருக்கு - தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க ! செயலாளர் SP.சண்முக நாதன் வாழ்த்து !

படம்
 நாசரேத் பேரூராட்சிக்கான வார்டு உறுப்பினர் தேர்தல் நடைபெற்றது  இதில் 12-வது வார்டு உறுப்பினராக அ.தி. மு .க  சேர்ந்த ரவீந்திரன் அதிக வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற அவர்  சான்றிதழுடன் தூத்துக்குடி மாவட்ட  அதிமுக மாவட்ட செயலாளர் சண்முகநாதன் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.  இந்த நிகழ்ச்சியில் ஆழ்வார் திருநகரி ஒன்றிய செயலாளர் விஜயகுமார், தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணை தலைவர் ஞானையா, நாசரேத் நகர இளைஞரணி செயலாளர் கராத்தே டென்னிசன், நாசரேத் கழக பிரமுகர் பெரியதுரை, கழக அவைத் தலைவர் சிவசுப்பு, நாசரேத் நகர இணைச் செயலாளர் முருகேசன், நகர இளைஞரணி துணைச் செயலாளர் பிரபு, வார்டு செயலாளர் சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தேசிய அளவிலான குடோ விளையாட் டு போட்டியில் தூத்துக்குடி மாணவர்கள் வென்று சாதனை

படம்
  தேசிய அளவிலான குடோ விளையாட் டு போட்டியில் தூத்துக்குடி மாணவர்கள் வென்று சாதனை கடந்த பெப்ரவரி மாதம் 14 முதல் 20-ஆம் தேதி வரை இமாச்சல் பிரதேச மாநிலத்தில் சோலார் மாவட்டத்தில் தேசிய அளவிலான குடோ போட்டி  குடோ இன்டர்நேஷனல் பெடரேஷன் ஏற்பாடு செய்தது.        இந்த தேசிய அளவிலான போட்டியில் 20க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர் இதில் தமிழகத்தின் சார்பாக 50 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்        குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து 7 மாணவர்கள் பங்கு பெற்றனர் இதில் மாணவர்கள் எமில் சாலமோன் மற்றும் அஜித் குமார் தேசிய அளவிலான போட்டியில் வெள்ளி மற்றும் வெண்கல பதக்கம் வென்றுள்ளனர் வெற்றி பெற்ற தூத்துக்குடி மாணவர்களுக்கு தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.     இந்த வரவேற்பு விழாவில் தூத்துக்குடி மாவட்ட குடோ குடும்ப சங்க செயலாளர் திரு ஸ்டீபன் மற்றும் சேர்மன் இசக்கி ராஜா தலைவர் பாலாஜி பொருளாளர் சுப்புராஜ் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற ம...

நட்டாத்தி ஊராட்சி பகுதிகளில் ரூ.10.90 இலட்சம் மதிப்பில் நடைபெற்றுவரும் பல்வேறு வளர்ச்சித் திட்டபணிகளை தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

படம்
நாள்: 16.02.2022 தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம்  நட்டாத்தி ஊராட்சிக்குட்பட்ட முள்ளன்விளை, குமாரபுரம், பட்டான்டிவிளை  ஆகிய  பகுதிகளில் ரூ.10.90 இலட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ்,இ.ஆ.ப., அவர்கள் செய்தியாளர்களுடன் ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்  தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் ஊராட்சி ஒன்றியம், நட்டாத்தி ஊராட்சி முள்ளன்விளையில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.4 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தில் இணைய வழி வாயிலாக மாணவ, மாணவிகளுக்கு வகுப்புகள் நடத்துவதை பார்வையிட்டதோடு, மாணவிகளிடம் நடத்தப்படும் வகுப்புகள் குறித்து கேட்டறிந்து சிறப்பான முறையில் வகுப்புகள் நடத்திட ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அங்கன்வாடி மையத்தின் அருகாமையில் உள்ள மகளிர் சுய உதவிக் கட்டிடத்தினை சீரமைத்து பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குமாரபுரம் கிராமத்தில் மகாத்மாகாந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ....

உலக தாய் மொழி தின வாழ்த்துக்கள்

படம்
உலகத்தில் உள்ள ஒவ்வொரு மனிதனும் தாயின் மீதுள்ள பாசமும், தாய் மொழியின் நேசமும் உணர்வு பூர்வமான ஒர் இணைப்பு - இது இரத்தத்தோடு கலந்த ஒன்று தாய் பால் வழியாக - ஒவ்வொரு சேய்க்கும் இறைவன் தந்த  வரம் தான் தாய் மொழி தாய் மொழியின் பெருமை காக்க தாய் மொழி வழியாக நற் சொற்களால் ஒருவருக்கொருவர் வாழ்த்துவோம் ... அன்பான  வார்த்தைகளால் பண்போடு அன்பை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வோம்  தாய்  மொழியின்  பெருமை காப்போம்  உலகத்தின் அமைதியும் - உள்ளத்தின் அமைதியும் காப்போம் அனைவருக்கும் "தாய்மொழி தின" நல் வாழ்த்துக்கள் இப்படிக்கு  E சிவகாமிநாதன் °நமது எழுத்தாணி "

தூத்துக்குடி மாவட்டம் பட்டினம்மருதூர் கடற்கரையில் சர்வதேச அளவில் கடல் சாகச போட்டிகள்

படம்
  தூத்துக்குடி மாவட்டம் பட்டினம்மருதூர்  கடற்கரையில் சர்வதேச அளவில் கடல் சாகச போட்டிகள் நடத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் - சுற்றுலா,   பண்பாடு   மற்றும் அறநிலையங்கள்   துறை   அரசின்   முதன்மைச்   செயலாளர்   டாக்டர்.பி.சந்திரமோகன்,   இ.ஆ.ப., அவர்கள் தகவல் -------------------------- தூத்துக்குடி மாவட்ட விளாத்திகுளம் வட்டம் பட்டினம்மருதூர்  கடற்கரையில் நடைபெற்ற கடல் சாகச போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சுற்றுலா,   பண்பாடு   மற்றும் அறநிலையங்கள்   துறை   அரசின்   முதன்மைச்   செயலாளர்   டாக்டர்.பி.சந்திரமோகன்,   இ.ஆ.ப., அவர்கள் பதக்கங்கள், சான்றிதழ்கள் வழங்கி பேசுகையில், தமிழ்நாடு     அரசு     சுற்றுலாத்துறையின்     சார்பாக     கடல்     சாகச     விளையாட்டுகள் செயல்படுத்துவது   தொடர்பாக   தூத்துக்குடி மாவட்...