இடுகைகள்

உக்ரைன் நாட்டிலிருந்து அழைத்து வரப்பட்ட இமநாதபுரம் மாவட்ட மருத்துவ கல்லூரி மாணவனுக்கு தூத்துக்குடி விமானநிலையத்தில் அமைச்சர்கள் வரவேற்பு

படம்
  உக்ரைன் நாட்டிலிருந்து இராமநாதபும் மாவட்டத்திற்கு அழைத்துவரப்பட்ட மருத்துவ மாணவனை                                மாண்புமிகு  சமூக நலன் மற்றும் மகளர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி.பெ.கீதா ஜீவன் அவர்கள்,              மாண்புமிகு மீன்வளம், - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமிப்புத்துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள்                     ஆகியோர் வரவேற்றார்கள் ----------------------- தூத்துக்குடி மாவட்ட விமான நிலையத்தில், உக்ரைன் நாட்டிலிருந்து, இராமநாதபுரம் மாவட்டத்திற்கு அழைத்துவரப்பட்ட மருத்துவ மாணவனை, மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி.பெ.கீதா ஜீவன் அவர்கள், மாண்புமிகு மீன்வளம், - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமிப்புத்துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் , ஆகியார் இன்று (13.03.2022) வரவேற்றார்கள்.  இந்தியாவிலிருந்து அநேகம் மாணவர்கள் மருத்துவம...

"தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளுக்கு குடிநீர்விநியோகம்* நிறுத்தம்

படம்
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளுக்கு குடிநீர்விநியோகம் செய்யப்படும் வல்லநாடு தலைமை நீரேற்று நிறைய கலியாவூர், குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகிய பகுதிகளுக்கான மின்சாரம் வரக்கூடிய பாதையான  கொம்புகாரநத்தம் உப மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் வருகின்ற 15 .3 .2022 செவ்வாய்க்கிழமை அன்று காலை 8.00 மணி முதல் மாலை 4 .00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. எனவே அன்றைய தினம் மாநகரப் பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுவதால் பொதுமக்கள் கிடைக்கின்ற குடிநீரை சிக்கனமாக பயன்படுத்திக் கொள்ளுமாறு மாநகராட்சி ஆணையர் திருமதி சாருஸ்ரீ இ.ஆ.ப. அவர்கள் அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்; அவர்களுக்கு மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் விருது

படம்
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் தலைமையில் சென்னையில் நடைபெற்று வரும் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மாநாட்டில், போதைப் பொருளுக்கு எதிரான  சிறப்பு நடவடிக்கை மேற்கொண்டமைக்காக தூத்துக்குடி மாவட்ட காவல்துறையை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட  காவல் கண்காணிப்பாளர்; அவர்களுக்கு மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் விருது வழங்கி சிறப்பித்தார். சென்னையில் இன்று (10.03.2022) மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் காவல்துறையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. அதன்படி இந்த மாநாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 21.12.2021 அன்று 21 கிலோ ஹெராயின் உட்பட போதைப் பொருள்களை பறிமுதல் செய்து கட்டுபடுத்தி போதைப் பொருளுக்கு எதிரான சிறப்பு நடவடிக்கை மேற்கொண்டமைக்காக தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினரை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு மாண்புமிகு தமிழக முதல்வர் ...

தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி அவர்களுக்கு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க நிர்வாகிகள் வாழ்த்து

படம்
தூத்துக்குடி மாநகராட்சி மேயராக பொறுப்பேற்றுள்ள திரு ஜெகன் பெரியசாமி அவர்களை தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடி கிளை சங்க நிர்வாகிகள் நேரில் சந்தித்தனர் இந்த சந்திப்பு நிகழ்வில் கிளை சங்க தலைவரும் மாநில செயற்குழு உறுப்பினருமான திரு  R.மாடசாமி அவர்கள் மேயர் திரு ஜெகன் பெரியசாமி அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்கள் இந்த நிகழ்வில் கிளை சங்க நிர்வாகிகள் ஓய்வுபெற்ற நகரமைப்பு அதிகாரி திரு சி ஜெயராஜ் மற்றும் திரு M. ராஜமணி, திரு தங்கசாமி திரு சண்முகவேல், திரு குருசாமி, திருமதி வெங்கடேஸ்வரி ஆகியோரும்  தமிழக அரசின் ஓய்வூதியர்களின் சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திரு அந்தோணிசாமி மற்றும் திரு M. ஆனந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்

மாநில அளவிலான பென்சாக் சிலாட் போட்டி : சாய் இன்டர்நேஷனல் அகாடமி வீரர்களுக்கு பாராட்டு

படம்
மாநில அளவிலான பென்சாக் சிலாட் போட்டியில் வெற்றி பெற்ற சாய் இன்டர்நேஷனல் அகாடமி வீரர்களுக்கு பாராட்டு விழா. மார்ச் 5 தேதி மற்றும் 6 ஆம் தேதியில் கரூரில் உள்ள சேரன் உடற்கல்வியியல் கல்லூரியில் நடைபெற்ற மாநில அளவிலான சீனியர் மற்றும் ஜூனியர் பென்சாக் சிலாட் போட்டியில் சுமார் 300க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்  .  இப்போட்டியில்15 தங்கம் 5 வெள்ளி 9 வெண்கலப் பதக்கங்களை வென்ற தூத்துக்குடி   வீரர்களுக்கு தூத்துக்குடி இரயில் நிலையத்தில் பாராட்டுவிழா நடைபெற்றது. இவ்விழாவில் சாய் இன்டர்நேஷனல் அகாடமி தலைமை பயிற்சியாளர் முத்து சங்கர் குமார் கலந்துகொண்டு வெற்றிபெற்ற வீரர்களையும்  ,பெற்றோர்களையும் பயிற்சியாளர் கபிரியேல் சாலமோன் ,விஜய் ,வேலவன்,  சுடலை கண், சரவண கௌதம், ஹசீனா பேகம் , ஆகியோரை பாராட்டி கௌரவித்தனர்.  விழா ஏற்பாடுகளை சாய் இன்டர்நேஷனல் அகாடமியின் தலைவர் சூர்யா ராம் மற்றும் பயிற்சியாளர்  காஜா ரகுமான் செய்திருந்தார்.

மாவட்ட அளவிலான இளைஞர்களுக்கான கலைப்போட்டிகள்

படம்
  08.03.2022 செய்திக் குறிப்பு  மாவட்ட அளவிலான இளைஞர்களுக்கான கலைப்போட்டிகள்  தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் அறிவிப்பு ---------------------------       தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் கலைத்துறையில் சிறந்து விளங்குகின்ற இளைஞர்களை கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்திட ஏதுவாக 17 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு மாவட்ட ஃமாநில அளவிலான கலைப்போட்டிகள் நடத்திட அரசு ஆணையிட்டுள்ளது.  குரலிசை, கருவியிசை, பரதநாட்டியம், கிராமிய நடனம் மற்றும் ஓவியம் ஆகிய 5 பிரிவுகளில் தூத்துக்குடி மாவட்ட அளவிலான போட்டிகள் மாவட்ட அரசு இசைப்பள்ளி வளாகத்தில் 12-03-2022 அன்று நடைபெறவுள்ளது.             குரலிசை, கருவியிசை, பரதநாட்டியம், போட்டிகள் கலை 10.00 மணிக்கும் கிராமிய நடம் மற்றும் ஓவியம் ஆகிய போட்டிகள் மதியம் 2.00 மணிக்கும் நடைபெறும் குழுவாக போட்டியில் பங்கு பெற அனுமதியில்லை.  தனிநபராக அதிக பட்சம் 5 நிமிடம் நிகழ்ச்சி நடத்திட அனுமதிக்கப்படுவார்கள்  குரலிசையிலும், நாதசுரம், வயல...

தேசிய அளவிலான பென்சாக் சிலாட் போட்டிக்கு தகுதி பெற்ற சாய் இன்டர்நேஷனல் அகாடமி வீரர்களுக்கு பாராட்டு விழா.

படம்
  தேசிய அளவிலான பென்சாக் சிலாட் போட்டிக்கு தகுதி பெற்ற சாய் இன்டர்நேஷனல் அகாடமி வீரர்களுக்கு பாராட்டு விழா.  மார்ச் 11 தேதி முதல் 14 தேதி வரை பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள ஜிஹெச்ஜி கால்சா கல்லூரியில் நடைபெற உள்ள தேசிய அளவிலான சீனியர் பென்சாக் சிலாட் போட்டிக்கு தேர்வு பெற்ற தமிழக  அணியின் தூத்துக்குடி வீரர்கள்  செய்யது சாகில் (45-50),சூர்யா ராம்(75-80), சதீஷ்குமார்(80-85) அந்தோணி ஜான் ரோபிஸ்(90-95), ஹசீனா பேகம்(45-50), சிந்து  (50-55) மற்றும் கண்டா பிரிவில் தேர்வு பெற்ற தங்க ராஜசேகர் ஆகியோர்களுக்கு பாராட்டுவிழா அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.  இவ்விழாவில் அழகப்பா பல்கலைக்கழக  ஒருங்கிணைப்பாளர்  கதிரேசபாண்டியன், டாக்டர் பச்சைமால், லயன் ராமகிருஷ்ணன் மற்றும் சாய் இன்டர்நேஷனல் அகாடமி தலைமை பயிற்சியாளர் முத்து சங்கர் குமார் ஆகியோர் வெற்றிபெற்ற வீரர்களையும் பயிற்சியாளர் கபிரியேல் சாலமோன் ,சுடலை கண் ஆகியோரையும்  பாராட்டி கௌரவித்தனர்.  விழா ஏற்பாடுகளை சாய் இன்டர்நேஷனல் அகாடமியின் பயிற்சியாளர்  காஜா ரகுமான் செய்திருந்தார்.