இடுகைகள்

மூக்குபேரி பள்ளியில் சிலம்ப பயிற்சி முகாம்.

படம்
  மூக்குபேரி பள்ளியில் சிலம்ப பயிற்சி முகாம். தூத்துக்குடி மாவட்டம்  நாசரேத் அருகே உள்ள  மூக்குபேரி தூய மார்க் மேல்நிலைப் பள்ளியில் வைத்து சிலம்ப பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த பயிற்சி முகாமில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிலம்ப மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இந்தப் போட்டியில் மாநில அளவிலான சிலம்ப போட்டிகளில் வெற்றி பெற சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டது  இந்த பயிற்சிக்கு திசையன்விளை சிலம்பப் பயிற்சியாளர். பாலசுப்பிரமணியம் மற்றும் அவர்களுக்கு குழுவினர் பயிற்சி அளித்தனர். இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக நாசரேத் காவல் நிலையம் ஆய்வாளர் பட்டாணி அவர்கள் கலந்துகொண்டு மாணவ மாணவிகளை ஊக்கி வைத்து பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.  இந்தப் இந்த பயிற்சி முகாமுக்கு பள்ளி தாளாளர் செல்வின் பள்ளித் துணை ஆய்வாளர் ஆனந்தகுமார், திருச்செந்தூர் வீரபாபு மற்றும் கலந்து பலர் கொண்டனர். இந்த சிலம்ப பயிற்சி முகாமை மாஸ்டர் டென்னிசன் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்.

மாநில அளவிலான சிலம்ப போட்டி : மூக்கு பேரி தூய மார்க் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வெற்றி

படம்
  24 -07-2022 அன்று     மாநில அளவிலான சிலம்ப போட்டி   விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நடைபெற்றது   200க்கு மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த மாநில அலைிலான இந்த போட்டியில் மூக்கு பேரி தூய மார்க் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர். இந்தப் போட்டியில் பல மாவட்டங்களில் இருந்து மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்  தூய மார்க் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சிலம்ப சண்டை பிரிவில் இரண்டாவது பரிசை முத்துராஜ், ஆல்ட்ரின், யூதா ஆகியோர்கள் வென்றனர் இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களையும் பயிற்சி அளித்த சிலம்ப மாஸ்டர் கராத்தே டென்னிசனையும் பள்ளி  தாளாளர் செல்வின், பள்ளி தலைமையாசிரியர் குணசீலன் பள்ளி, ஆசிரியர் அமிர்தராஜ், பள்ளி உடற்பயிற்சி ஆசிரியர் ஏஞ்சல் மற்றும் கலந்து கொண்டு பாராட்டினர்.

44வது சர்வதேச சதுரங்க போட்டி : தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தந்த துவக்க விழா ஜோதி

படம்
   சென்னை மாமல்லபுரத்தில் 44வது சர்வதேச சதுரங்க போட்டி நடைபெறுவதையொட்டி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஹாக்கி மைதானத்துக்கு வருகை தந்த துவக்க விழா ஜோதியினை              மாண்புமிகு சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள் வரவேற்றார்கள். -------------------------- சென்னை மாமல்லபுரத்தில் 44வது சர்வதேச சதுரங்க போட்டி நடைபெறுவதையொட்டி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஹாக்கி மைதானத்துக்கு வருகை தந்த துவக்க விழா ஜோதியினை              மாண்புமிகு சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் இன்று (26.07.2022) வரவேற்று பேசியதாவது:   சென்னை மாமல்லபுரத்தில் 44வது சர்வதேச சதுரங்க போட்டி நடைபெறுவதற்கு காரணமான மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது பாராட்டினை தெரிவித்துக்கொள்கிறேன். சதுரங்க விளையாட்டு போட்டி நடத்துவதற்கு மிகத் துல்லியமாக திட்டங்கள் தீட்டி குறுகிய காலத்த...

தூத்துக்குடியில் மாலை தோரும் சூழும் கரு மேகங்கள்

படம்
  தமிழ்நாட்டில் சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது  அதேபோல் தூத்துக்குடி மாவட்ட பகுதிகளில் ஆங்காங்கே பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது ...குறிப்பாக தூத்துக்குடி பகுதியில் மாலை நேரம் தொடங்கியவுடன் கருமேகங்கள் சூழ்ந்து கொண்டு வெயிலை குறைத்து வெட்கையை தணித்து குளிர்ந்த காற்றுடன் இதமான மழைபெய்கிறது  இந்த சூழல் இருக்கும் இடத்தில் இருந்து குற்றால சூழலை உணர்த்துகிறது

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில். மக்கள் குறை தீர்க்கும் நாள்

படம்
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் உத்தரவுப்படி பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் மாதத்தின் மூன்றாவது புதன் கிழமையான இன்று தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.  தமிழக அரசு உத்தரவுப்படி இரு வாரங்களுக்கு ஒருமுறை முதல் மற்றும் மூன்றாவது புதன்கிழமைகளில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.  அதன்படி இம்மாதத்தின் மூன்றாவது புதன் கிழமையான இன்று (20.07.2022) தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பொதுமக்கள் 20 நபர்கள் தங்கள் குறைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்களிடம் நேரடியாக தெரிவித்;து புகார் மனு அளித்தனர். பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 

மேலஆத்தூர் மற்றும் கொட்டாரக்குறிச்சி. பகுதிகளில் தயாரிக்கப்படும் ஆகாய தாமரை மதிப்பு கூட்டு பொருட்களை தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர். ஆய்வு .

படம்
தூத்துக்குடி மாவட்டம் மேலஆத்தூர் மற்றும் கொட்டாரக்குறிச்சி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தயாரிக்கப்படும் ஆகாய தாமரை மதிப்பு கூட்டு பொருட்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் செய்தியாளர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். ---------------------------- தூத்துக்குடி மாவட்டம் மேலஆத்தூர் மற்றும் கொட்டாரக்குறிச்சி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தயாரிக்கப்படும் ஆகாய தாமரை மதிப்பு கூட்டு பொருட்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (20.07.2022) செய்தியாளர்களுடன் ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில், கிராமப்புறங்களில் ஏழை எளிய மகளிர் மற்றும் சுய உதவிக்குழுவினரின் குடும்ப சூழ்நிலையை கருத்தில்கொண்டும், நீர் ஆதாரத்திற்கு கேடு விளைவிக்கும் ஆகாய தாமரையினை அகற்றிடும் விதமாகவும் கழிவு பொருளான ஆகாய தாமரையில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சியினை ஐதராபாத்தை சேர்ந்த கிரியேட்டிவ் பீ நிறுவனர் திருமதி.பீனா அவர்கள் வாயிலாக ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியம் மேலஆத்தூர் ஊராட்சி, திருவைகுண்டம் ஊராட்சி ஒன்றியம் கொட்டாரக்குறிச்சி ஊராட்சி லெட்சுமிபுரம் ...

ரயில் முன் பாய்ந்து வாலிபர் ஒருவர் தற்கொலை.

படம்
 தூத்துக்குடியில் ரயில் முன் பாய்ந்து வாலிபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  தூத்துக்குடியில் மீளவிட்டான் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் ரயிலில் அடிபட்டு சுமார் 40 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்து தூத்துக்குடி ரயில்வே  போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு விசாரணை நடத்தியதில், அங்கு இறந்து கிடந்தவர் 1 ஆம் கேட் அருகில் காமாட்சி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சண்முகசுந்தரம் மகன் செல்வம் (43) எனத் தெரியவந்தது.  இவருக்கு திருமணமாகி மனைவி மாரியம்மாள் (36) என்ற மனைவியும் நாகலட்சுமி (15),  சுந்தர் (8) என இரண்டு குழந்தைகள் உள்ளனர். தூத்துக்குடி அலங்காரதிட்டு பகுதியில் சொந்தமாக பட்டறை அமைத்து தச்சு வேலை செய்து வருகிறார். கடந்த சனிக்கிழமை காலை 9 மணிக்கு தனது வீட்டிலிருந்து வேலைக்கு செல்வதாக கூறி சென்றவர். நேற்று வரை பட்டறையிலேயே தங்கி வேலை பார்த்து வந்து  உள்ளார். தனது மனைவியிடம் தொலைபேசி வாயிலாக மட்டுமே பேசி உள்ளார்.  இந்நிலையில் இன்று அதிகாலை...